கனடாவும் நேட்டோவும் ரஷ்யாவுடனான போரை தவிர்க்க வேண்டும் என கனடிய பிரதமர் Justin Trudeau கூறினார்.
கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவுடன் நேரடி மோதலில் நேட்டோ படைகளை ஈடுபட வைக்கும் போரின் தீவிரத்தை தனது அரசாங்கம் காண விரும்பவில்லை என பிரதமர் வெள்ளிக்கிழமை (04) தெரிவித்தார்.
உக்ரைன் மீது விமானங்கள் பறக்க கூடாது என்ற வலயத்தை நிறுவுவதை நிராகரித்த நேட்டோவின் முடிவை Trudeau நியாயப்படுத்தினார்.
உக்ரேனிய வானில் ரஷ்ய விமானங்களுக்கு நேட்டோ தடை விதித்தால், அந்த வான்வெளியில் ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்த நேட்டோ Jet விமானங்களை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் Trudeau சுட்டிக்காட்டினார் .
இந்த நடவடிக்கை துரதிர்ஷ்டவசமான மோதலுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.
கனேடிய ஆயுதப்படையின் Jet விமானங்களை உக்ரைனுக்கு அனுப்புவதையும் Trudeau நிராகரித்தார்.
கனடாவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக பொருளாதார தடைகளில் கவனம் செலுத்துவதாக Trudeau கூறினார்.