Conservative கட்சியின் புதிய தலைவர் September 10ஆம் திகதிக்குள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஏற்பாட்டுக் குழு புதன்கிழமை (02) தலைமைத் தேர்தலுக்கான விதிகளையும் நடைமுறைகளையும் ஏற்றுக்கொண்டது.
இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளிலும் தேர்தல் விதிகளின் முழுமையான தொகுப்பு இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் தலைமைத் தேர்தலில் போட்டியிட April 19 வரை விண்ணப்பிக்கலாம்.
வேட்பாளர்கள் மொத்த நுழைவுக் கட்டணமாக $200,000 செலுத்த வேண்டும்.
தவிரவும் மேலும் $100,000 வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.
இந்த வைப்புத் தொகை தலைமைத் தேர்தல் முடிந்ததும் திரும்ப வழங்கப்படும்.
இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் June மாதம் 3ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இதுவரை, Ottawa தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Pierre Poilievre மட்டுமே தலைமை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.