தேசியம்
செய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டும் எரிபொருளின் விலை

கனடாவின் பல பாகங்களிலும் எரிபொருள் விலை தொடர்ந்தும் அதிகரிக்கிறது.

எரிபொருளின்  சராசரி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது

எரிபொருள் விலை தொடர்ச்சியாக வரும் நாட்களில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில நாட்களில் எரிபொருள்  லீட்டருக்கு இரண்டு டொலரை எட்டும் என ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்

வழமையாகவே கனடாவில், British Colombia மாகாணம் அதி கூடிய எரிபொருள் விலையை எதிர்கொண்டுள்ளது
வியாழக்கிழமை (03) இரண்டாவது நாளாக, Metro Vancouver பகுதியில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது
Metro Vancouver பகுதியில்  சில  எரிபொருள்   நிலையங்கள் வியாழக்கிழமை எரிபொருள் விலையை லீட்டருக்கு 194.9 சதமாக அறிவித்திருந்தன.
வெள்ளிக்கிழமை காலை Newfoundland and Labradorரில் எரிபொருளின் விலை லீட்டருக்கு 15 சதத்தினால் உயரும் என பல எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் எரிபொருளின்  அதிகபட்ச விலை மத்திய Newfoundlandலில் லீட்டருக்கு ஒரு டொலர் 95 சதமாகவும், மேற்கு Labradorரில் இரண்டு டொலருக்கு அதிகமாகவும் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது

Toronto பெரும்பாகத்திலும், தெற்கு Ontarioவிலும் எரிபொருளின் விலை  வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது

வியாழக்கிழமை எரிபொருளின் விலை, லீட்டருக்கு ஏழு சாதமாக அதிகரித்து ஒரு டொலர் 75 சதம் வரை விற்பனையானது
எரிபொருளின் விலை Ontarioவில் லீட்டருக்கு ஒரு டொலர் 90 சதம் வரை உயரும் என எதிர்வு கூறுகிறது
New Brunswick மாகாணத்தில் வியாழக்கிழமை எரிபொருளின் அதிகபட்ச விலை ஒரு டொலர் 63 சதமாக எட்டியது.
வியாழக்கிழமை  Calgary நகரின் சராசரி எரிபொருள் விலை லீட்டருக்கு சுமார் 1.58 சதமாக  உயர்ந்தது .
 இந்த விலைகள் விரைவில்  குறையும் என பெரும்பாலான ஆய்வாளர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமரினால் நியமனம்

Lankathas Pathmanathan

தேர்தலில் ஏழு தமிழர்கள் தோல்வி!

Gaya Raja

கனடாவில் முதல் BA.2.86 COVID மாறுபாடு பதிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment