உக்ரைனில் ரஷ்யாவுக்காகப் போராடும் கனடியர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கனடாவின் துணைப் பிரதமர் Chrystia Freeland எச்சரித்துள்ளார்.
வியாழக்கிழமை (03) Ottawaவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Freeland இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
ரஷ்யாவின் தாக்குதல் சட்டவிரோதமானது என கூறிய துணைப் பிரதமர் , ரஷ்ய தரப்புக்காக போராடும் எவரும் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் தெரிவித்தார்
எவ்வாறாயினும், கனேடியர்கள் உக்ரைன் தரப்புக்காக போராடுவது சட்டப்பூர்வமானதா என்பதில் நிச்சயமற்ற தன்மை இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் ஒப்புக்கொண்டார்.
நாட்டைப் பாதுகாக்க உதவும் சர்வதேச படைப்பிரிவில் தன்னார்வலர்களாக சேர கோரும் உக்ரேனிய அரசாங்கத்தின் அழைப்புக்கு பல கனேடியர்கள் சாதகமாக பதிலளித்து வருகின்றனர்.
அதற்குப் பதிலாக கனடிய ஆயுதப் படையில் சேர கனடியர்களை அமைச்சர் ஆனந்த் ஊக்கப்படுத்தினார்.