கனடிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை 0.5 சதவீதமாக உயர்த்துகிறது
COVID தொற்றின் ஆரம்பத்தில் போது வட்டி விகிதத்தை குறைத்த பின்னர் புதன்கிழமை (02) முதல் முறையாக மீண்டும் உயர்த்தியுள்ளது.
பணவீக்க விகிதங்களை சமாளிக்கும் முயற்சியாக இந்த உயர்வு நோக்கப்படுகின்றது.
பணவீக்கம் முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட சமீப காலத்தில் அதிகமாக இருக்கும் என இன்றைய அறிவித்தலின் போது கனடிய மத்திய வங்கி எதிர்வு கூறியது.
வட்டி விகிதத்தின் இன்றைய அதிகரிப்பு இறுதியானதாக இருக்காது என மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் பல வட்டி விகித அதிகரிப்புகளை பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.