உக்ரைனில் கனேடிய ஆயுதப் படைகள் போரில் ஈடுபடுவதற்கு தற்போதைய நிலையில் எந்த திட்டமும் இல்லை என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
கிழக்கு ஐரோப்பாவில் கனேடிய ஆயுதப் படைகள் ஈடுபட்டுள்ள இரண்டு இராணுவ பணிகளின் நோக்கம் பயிற்சி, தடுப்பு நடவடிக்கை என அவர் கூறினார்.
இன்று எதிர்கொள்ளும் தாக்குதலுக்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ள கனேடிய துருப்புக்கள், 35,000க்கும் மேற்பட்ட உக்ரேனிய படையினருக்கு பயிற்சி அளித்துள்ளதாக அமைச்சர் வியாழக்கிழமை (24) கூறினார்.
கனேடிய ஆயுதப்படைகள் இந்த பிராந்தியத்தில் முழு அரசாங்க முயற்சிகளுக்கும் உதவ தயாராக உள்ளன எனவும் அவர் கூறினார்.
தேவைப்பட்டால் NATO பதில் நடவடிக்கைக்கு உதவ 3,400 துருப்புக்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆனந்த் அறிவித்தார்.