Ontario அரசாங்கம் அதன் அவசரகால நிலையை நிறுத்தியுள்ளது.
முதல்வர் Doug Ford அலுவலகம் புதன்கிழமை (23) இந்த அறிவித்தலை வெளியிட்டது.
எதிர்ப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உதவுவதற்கான அவசரகால நிலையை புதன் மாலை 5 மணியுடன் நிறுத்துவதாக முதல்வரின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தும் மத்திய அரசாங்கத்தின் முடிவுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
முதல்வர் Ford இரண்டு வாரங்களுக்கு முன்னர் Ontarioவில் அவசரகால நிலையை அறிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.