கனடிய இராணுவ தளபாடங்கள் அடங்கிய இரண்டாவது விமானம் புதன்கிழமை (23) உக்ரைனை சென்றடடைந்தது.
ரஷ்ய ஊடுருவலுக்கு எதிராக உக்ரைனை ஆதரிப்பதாக கனடிய அரசாங்கம் உறுதியளித்ததன் ஒரு பகுதியாக இராணுவ தளபாடங்கள் உக்ரைனை சென்றடைந்தது.
கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
ஒரு இறையாண்மை அரசின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அமைச்சர் ஆனந்த் குறிப்பிட்டார்.
உக்ரைனின் இறையாண்மை, சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் கனடா தொடர்ந்தும் உக்ரைனுடன் செயல்படும் எனவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் Oleksii Reznikov கனடாவின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
கனடிய பிரதமர் Justin Trudeau உக்ரைனுக்கு 7.8 மில்லியன் டொலர் மதிப்புள்ள உபகரணங்களையும் வெடிமருந்துகளையும் வழங்குவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தார்.