தேசியம்
செய்திகள்

போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட அமைப்பாளர்களில் ஒருவருக்கு பிணை மறுப்பு

COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட அமைப்பாளர்களில் ஒருவரான Tamara Lichசிற்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.

Lichசிற்கு பிணை  வழங்க Ontario நீதிமன்ற நீதிபதி செவ்வாய்க்கிழமை (22) காலை மறுத்தார்.

Lich விடுவிக்கப்பட்டால் அவர் மீண்டும் குற்றஞ்சாட்டப்படுவதற்கான கணிசமான வாய்ப்பு இருப்பதாக நீதிபதி கூறினார்.

கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட Lich, தவறான செயல்களுக்கு ஆலோசனை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த போரட்டங்களின் மற்றொரு தலைவரான Pat King குறைந்தபட்சம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை சிறையில் தடுத்து வைக்கப்படவுள்ளார்.

கடந்த வார இறுதியில் போராட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான  Chris Barber பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 196 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் 10 பேர் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர் எனவும் திங்கட்கிழமை Ottawa காவல்துறை தெரிவித்தது.

Related posts

Scarborough துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – இருவர் காயம்!

Lankathas Pathmanathan

Albertaவில் பொது சுகாதார அவசர நிலை அறிவிப்பு!

Gaya Raja

Ontarioவில் மீண்டும் 30 சென்ரி மீட்டர் பனிப்பொழிவு?

Lankathas Pathmanathan

Leave a Comment