வாகன உரிம தகடு புதுப்பித்தல் கட்டணத்தையும் பயணிகள் வாகனங்களுக்கான stickerகளையும் Ontario அரசாங்கம் இரத்து செய்கிறது.
March மாதம் 13ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுலில் வரும் என செவ்வாய்க்கிழமை (22) முதல்வர் Doug Ford அறிவித்தார்.
இந்த நடவடிக்கை பல Ontario வாகன ஓட்டுநர்களுக்கு வருடத்திற்கு 120 டொலர்களை சேமிக்கும் என இந்த அறிவித்தலின் போது Ford கூறினார்.
March 2020 முதல் செலுத்தப்பட்ட உரிமத் தகடு புதுப்பித்தல் கட்டணத்தை அரசாங்கம் திரும்ப வழங்கும் எனவும் Ford அறிவித்தார்.
இதன் மூலம் 7.5 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் பணத்தைத் திரும்பப் பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Ontarioவில் தற்போது எட்டு மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது