Ottawaவில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர்.
நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் நகரின் மையப் பகுதியை விட்டு வெளியேறும் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்ததால், Ottawa காவல்துறை வியாழக்கிழமை (17) மாலை நாடாளுமன்ற வளாகத்தில் பலரை கைது செய்தது.
வியாழன் காலை பெரும் எண்ணிக்கையிலான காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் வெளியேறுமாறு அல்லது கைது செய்யப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர் என எச்சரிக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஏராளமான அதிகாரிகள் நகரின் மத்திய பகுதிக்கு வியாழன் மாலை நகர்ந்துள்ளனர்.
போராட்ட அமைப்பாளர்களில் ஒருவரான Chris Barber, கைது செய்யப்படுவதை காட்ட video ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.
மேலும் பலர் வியாழன் மாலை நாடாளுமன்ற வளாகத்தில் காவல்துறையினரால் கைவிலங்கிடப்பட்டனர்.
கைதுகள் தொடர்கின்ற போதிலும், எதிர்ப்பாளர்கள் தொடர்ந்தும் நாடாளுமன்ற வளாகத்தில் தங்கியுள்ளனர்.
இந்த போராட்டங்களுடன் தொடர்புடைய சில நபர்களின் கணக்குகளை நிதிச் சேவை வழங்குநர்கள் ஏற்கனவே முடக்கியுள்ளனர் என வியாழக்கிழமை துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland அறிவித்திருந்தார்.
எதிர்வரும் நாட்களில் இந்த நடவடிக்கை அதிகரிக்கும் என அவர் கூறினார்
கடந்த திங்களன்று அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசாங்கம் நிதி நிறுவனங்களுக்கு புதிய அதிகாரங்களை வழங்கியது.
எனினும் இடைநிறுத்தப்பட்ட கணக்குகளின் விபரங்களை வெளியிடுவதில்லை என அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக Freeland தெரிவித்தார்.