தேசியம்
செய்திகள்

Scarborough உயர்நிலைப் பாடசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு

Scarborough உயர்நிலைப் பாடசாலையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (14) மாலை 3 மணியளவில் Midland and Lawrence சந்திப்பிற்கு அருகில் உள்ள David and Mary Thomson இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் நிகழ்ந்தது.

இதில் 18 வயதான Jahiem Robinson என்ற மாணவர் பலியானார்.

12 ஆம் வகுப்பு மாணவரான இவர் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் காணப்பட்ட பின்னர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர் Robinson மீது பின்னால் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பின்னர் இரண்டாவது நபர் ஒருவரையும் அவர் தாக்கியுள்ளார்.

திங்கட்கிழமை மாலை 7 மணியளவில் காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்தனர்.

அவர் மீது முதல் நிலை கொலை, கொலை முயற்சி ஆகிய வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் விதிமுறைகளின்படி அவரது அடையாளம் வெளியிடப்பட முடியாது.

சந்தேக நபர் அதே பாடசாலையில் 9 ஆம் வகுப்பில் படித்ததாக நம்பப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை காலை அவர் மெய்நிகர் வழியே நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Related posts

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – May 25, 2022 (புதன் )

Lankathas Pathmanathan

ஐரோப்பாவிற்கு ஒரு வார விஜயத்தை முடித்தார் குடிவரவு அமைச்சர் Fraser

Lankathas Pathmanathan

ஆறு மாதங்களின் பின்னர் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள்

Lankathas Pathmanathan

Leave a Comment