கனடாவின் பொது சுகாதார நிறுவனம் BA.2 எனப்படும் புதிய Omicron துணை திரிபு குறித்து அவதானித்து வருவதாக கனடாவின் தலைமை மருத்துவர் Dr. Theresa Tam கூறினார்.
புதிய Omicron துணை திரிபின் 100க்கும் மேற்பட்ட தொற்றுக்களை கனடாவின் பொது சுகாதார நிறுவனம் கண்டறிந்துள்ளதாக அவர் வெள்ளிக்கிழமை (28) தெரிவித்தார்.
கடந்த Novemberரில் இந்த மாறுபாடு முதன்முதலில் கண்டறியப்பட்டது என கூறும் அவர், அதன் பின்னர் நிபுணர்களால் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இவை பிரதானமாக சர்வதேச பயணிகளிடம் இருந்து பரவுவதாக பொது சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியது.
அனைத்து புதிய COVID திரிபுகளை போல் BA.2 துணை திரிபையும் கண்காணித்து வருவதாக பொது சுகாதார நிறுவனம் கூறியது.
பொது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை கனடியர்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும் பொது சுகாதார நிறுவனம் வலியுறுத்துகின்றது.