தேசியம்
செய்திகள்

உக்ரைனை விட்டு இராஜதந்திரிகளின் குடும்பத்தினர் வெளியேற வேண்டும்: கனடா உத்தரவு

இராஜதந்திரிகளின் குடும்பத்தினரை உக்ரைனை விட்டு வெளியேறுமாறு கனடா உத்தரவிட்டுள்ளது.

உக்ரைனில் உள்ள தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கனேடிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் தூதரக ஊழியர்கள் தொடர்ந்து பணியில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்குட்பட்ட தூதரக ஊழியர்களின் குழந்தைகள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன்  தற்காலிகமாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு கனடாவின் உலக விவகாரங்களுக்கான அமைச்சு ஒரு அறிக்கையில் கோரியுள்ளது.

வெளிநாட்டில் உள்ள கனேடிய பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதுகாப்பு கனடாவின் முன்னுரிமை ஆகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவின் உலக விவகாரங்களுக்கான அமைச்சு, உக்ரைனுக்கான கனேடிய தூதரக அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாக கண்காணிப்பார்கள் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது .

திங்கட்கிழமை பின்னிரவு அத்தியாவசியமற்ற கனடியர்கள் உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் என பரிந்துரைத்ததன் மூலம் கனடா உக்ரைனுக்கான பயண ஆலோசனையை புதுப்பித்தது.

Related posts

Ontario Liberal தலைமைப் போட்டியில் Mississauga நகர முதல்வர்?

Lankathas Pathmanathan

மருத்துவ உதவியால் இறப்பதற்கான தகுதியை நீட்டிப்பதை தாமதப்படுத்தும் சட்டமூலம்

Lankathas Pathmanathan

சமூகத்துடன் நெருக்கமான உறவுகளை பேண விரும்புகிறேன்: Montreal காவல்துறையின் புதிய தலைவர்

Lankathas Pathmanathan

Leave a Comment