Ontarioவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை ஒரு மில்லியனை, மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
திங்கட்கிழமை (24) தொற்றின் காரணமாக 3,861 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 615 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்கள் வரை Ontarioவில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களின் 91.6 சதவீதமானவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
88.9 சதவீதமானவர்கள் இரண்டு தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
மட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் காரணமாக அண்மைக் காலமாக பதிவாகும் தொற்றுகளின் எண்ணிக்கைகள் Ontarioவில் உள்ள உண்மையான தொற்றுகளின் எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுவதாக பொது சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.