அமெரிக்க எல்லையில் ஆட்கள் கடத்தப்படுவதை தடுக்க கனடா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என கனடிய பிரதமர் Justin Trudeau கூறினார்.
Manitobaவில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம், அமெரிக்க-கனடா எல்லையின் கனேடியப் பகுதியில் கடும் குளிரில் உறைந்து இறந்த நிலையில் பிரதமரின் இந்த கருத்து வெளியானது.
Minnesotaவின் எல்லைக்கு வடக்கே சில மீட்டர் தொலைவில் உள்ள Manitoba மாகாணத்தில் நால்வரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அமெரிக்கர் ஒருவர் மீது மனித கடத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இறந்த நால்வரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதை நிறுத்த கனடா, அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக பணியாற்றி வருவதாக Trudeau கூறினார்.
இந்த மரணங்கள் பெரிய மனித கடத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.