December 12, 2024
தேசியம்
கட்டுரைகள்ராகவி புவிதாஸ்

ஆட்சிக்காலத்தில் முன்னெப்போதும் இல்லாதளவு குறைந்த ஒப்புதல் மதிப்பீடு பெற்ற Ontario முதல்வர்

Ontario மாகாண சபை தேர்தலுக்கு ஐந்திற்கும் குறைவான மாதங்களே உள்ளன. இந்த நிலையில் முதல்வர் Doug Fordடிற்கான ஒப்புதல் மதிப்பீடு அவரது ஆட்சிக்காலத்தில் முன்னெப்போதும் இல்லாதளவு குறைந்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

Ontarioவில் 18 வயதிற்கு மேற்பட்ட 1081 பேரிடம் Angus Reid Institute மேற்கொண்ட கருத்துக் கணிப்பில், 30 சதவீதம் பேர் மாத்திரமே முதல்வராக Ford செய்யும் பணிக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். மாறாக 67 சதவீதம் பேர் அவரது பணியை ஏற்க மறுத்துள்ளனர்.

கருத்துக்கணிப்புக்கு பதிலளித்தவர்களில் 36 சதவீதம் பேர் முதல்வர் செய்து கொண்டிருந்த பணியை ஆதரித்துள்ள நிலையில், முதல்வருக்கான ஒப்புதல் மதிப்பீடு கடந்த October மாதத்தில் இருந்து 6 புள்ளிகள் குறைந்துள்ளது.

55 வயதிற்கு மேற்பட்டவர்கள் Fordக்கு அதிக எண்ணிக்கையில் ஆதரவு வழங்கியுள்ளனர். இந்த வயதினர் மத்தியில் அவருக்கு 52 சதவீத ஒப்புதல் மதிப்பீடு கிடைத்துள்ளது. ஆனால் அவருக்கான ஒப்புதல் மதிப்பீடு 18 முதல் 34 வயதுடையவர்களிடையே வெறும் 26 சதவீதமாகவும், 35 முதல் 54 வயதுடையவர்களில் 38 சதவீதமாகவும் சரிந்துள்ளது.

மிக சமீபத்திய தேர்தலில் மத்திய Conservative  கட்சிக்கு வாக்களித்த தனிநபர்களிடையே கூட Fordடின் புகழ் மந்தமாக இருந்ததுடன், அவரின் பணியை அங்கீகரிப்பவர்களில் (51 சதவீதம்) குறுகியளவிலான பெரும்பான்மை மட்டுமே உள்ளது.

இதேபோல், Ford பெருந்தொற்றைக் கையாள்வது தொடர்பிலும் இருதுருவ நிலைப்பாடுகள் உள்ளன. கருத்துக் கணிப்புக்கு பதிலளித்த 10 பேரில் 7 பேர் தொற்றை அவர் மோசமாகவோ (31 சதவீதம்) அல்லது மிக மோசமாகவோ (37 சதவீதம்) செயற்படுவதாக நம்புகின்றனர். கருத்துக் கணிப்புக்குபதிலளித்தவர்களில் 6 சதவீதம் பேர், Ford COVID தொற்றை கையாள்வதில் மிகச் சிறப்பாக செயற்படுவதாகவும், 23 சதவீதம் பேர் அவர் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறியுள்ளனர்.

Ontario குளிர்கால விடுமுறைக்குப் பின்னர் றகு பாடசாலைகளை மீள திறப்பதை இரண்டு வாரங்கள் தாமதப்படுத்தியது, மாகாணத்தின் பெற்றோருக்கு எரிச்சலூட்டும் இந்த நடைமுறையை தொடர்கிறது. பெற்றோர்கள் வகுப்பறை கற்றலுக்காக பாடசாலைகளை திறப்பதில் சீரான அணுகுமுறையை விரும்புவதாக தெரிவித்துள்ள நிலையில், Ontarioவில் உள்ள குழந்தைகள், நாட்டின் ஏனைய மாணவர்களைக் காட்டிலும் பெருந்தொற்றுக் காலத்தில் இணையவழிப் பாடசாலைகளில் அதிக நேரத்தைச் செலவிட்டுள்ளனர். இதேவேளை, வணிக உரிமையாளர்களும் தொழிலாளர்களும் உணவகங்களின் உள்ளிருந்து உண்ணுதல், உடற்பயிற்சி நிலையங்கள், திரையரங்குகள், பெரிய நிகழ்வுகள் மீதான புதுப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வருத்தமடைந்துள்ளனர். சுகாதார பணியாளர்களோ மீண்டும் நோயாளர்கள் அதிகளவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதை கையாண்டு வருகிறார்கள் என கருத்துக்கணிப்பு முடிவுகளுடனான அறிக்கையில் Angus Reid தெரிவித்துள்ளது.

“இவை அனைத்தும் Ford  பெருந்தொற்றை கையாள்வது குறித்து Ontario வாக்காளர்கள் வழங்கும் எதிர்மறை மதிப்பீட்டில் தாக்கம் செலுத்தக்கூடும்.”

Angus Reid கருத்துக்கணிப்பில் பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர் (65 சதவீதம் பேர்) Fordன் அரசாங்கம் தடுப்பூசி விநியோகத்தில் சிறப்பாக செயற்பட்டதாக கருதுகின்றனர். ஆனால், கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 73 சதவீதம் பேர், துரித antigen பரிசோதனைகள் (rapid antigen tests) கிடைக்கச் செய்வதில் முதல்வர் மோசமாக அல்லது மிக மோசமாக செயற்பட்டதாகக் கூறியுள்ளனர்.

நீண்ட கால பராமரிப்பு அமைச்சர் Rod Phillips திடீரென பதவி விலகியதை அடுத்து வௌியாகியுள்ள Ontario கருத்துக்கணிப்பு முடிவுகள், COVID பெருந்தொற்றைக் கையாளும் விதம், முதல்வர்களின் செயற்திறன் ஆகியவை தொடர்பில் கனடாவின் சகல பகுதிகளிலுமுள்ள குடியிருப்பாளர்களிடமும் Angus Reid பரந்தளவில் மேற்கொண்ட வாக்கெடுப்பின் ஒரு பகுதியாகும்.

நாடளாவிய ரீதியில் மாகாண முதல்வர்கள் மத்தியில் கருத்துக்கணிப்பில் Ford மூன்றாவது குறைந்த ஒப்புதல் மதிப்பீட்டைக் கொண்டிருந்தாலும், Alberta முதல்வர் Jason Kenney (26 சதவீதம்), Manitoba முதல்வர் Heather Stefanson (21 சதவீதம்) ஆகியோரை விட முன்னணியில் உள்ளார்.

கருத்துக்கணிப்பு வெளியான தினம் ஊடகங்களிடம் பேசிய For, “கருத்துக்கணிப்பைப் பார்க்கவில்லை” என்று கூறினார். ஆனால் Liberal கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது “இந்த மாகாணத்திற்கு ஒரு பெரும் பேரழிவாக இருக்கும்” என்று நம்புகிறார்.

“நாங்கள் பதவிக்கு வந்தபோது எதிர்கொண்ட அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்வதில் கடந்த நான்கு ஆண்டுகளை செலவிட்டோம்,” என்கிறார் Ford. “அடுத்த தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவு மிகவும் எளிமையானது, உங்கள் பணம் தொடர்பில் யாரை நீங்கள் நம்புகிறீர்கள்? காலங்காலமாக இருந்த பிரச்சினைகளில் இருந்து நம்மை மீட்க முடியும் என்று காண்பித்த மாகாண அரசை நம்புகிறீர்களா அல்லது மீண்டும் பின்னோக்கிச் செல்ல விரும்புகிறீர்களா?”

ராகவி புவிதாஸ்

இந்த Angus Reid கணக்கெடுப்பு January 7 முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இணையவழியான குழுவொன்றின் மூலம் நடத்தப்பட்டது.

Related posts

நெறிமுறை விதிகளை மீறிய விஜய் தணிகாசலம் மன்னிப்பு கோரினார்!

Lankathas Pathmanathan

Trudeauவின் Liberal கட்சி தனது மூன்றாவது ஆட்சிக் காலத்துக்கென வழங்கியுள்ள வாக்குறுதிகள் …..

Lankathas Pathmanathan

Doug Ford, தமிழர் போராட்டம் விற்பனைக்கல்ல!

Lankathas Pathmanathan

Leave a Comment