Ontario வனவிலங்குகளில் முதன்முறையாக COVID கண்டறியப்பட்டது.
தென்மேற்கு Ontarioவில் உள்ள ஐந்து மான்களில் எடுக்கப்பட்ட மாதிரிகள் COVID தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் Ontario மாகாணத்தின் வனவிலங்குகளில் முதல் முறையாக தொற்று கண்டறியப்பட்டது.
கடந்த Novemberரில் நீண்டகால கழிவு நோய் கண்காணிப்பு திட்டத்தின் மூலம் மாதிரிகள் எடுக்கப்பட்டதாக வனவள அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த கண்டுபிடிப்பின் முன்னர், Quebec, Saskatchewan ஆகிய மாகாணங்களில் உள்ள விலங்குகளில் COVID தொற்று பதிவாகியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.