தடுப்பூசி போடாத கனேடிய பார ஊர்தி ஓட்டுனர்கள் புதிய நடைமுறையின் கீழ் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது.
இந்த வார இறுதியில் இந்த புதிய நடைமுறை அமுலில் வருகிறது.
தடுப்பூசி போடாத கனேடிய பார ஊர்தி ஓட்டுனர்களுக்கு இந்த புதிய நடைமுறையில் விலக்கு அளிக்கப்படாது என மத்திய அரசு வியாழக்கிழமை (13) அறிவித்தது.
கனடாவின் போக்குவரத்து, சுகாதாரம், பொது பாதுகாப்பு அமைச்சர்கள் ஒரு கூட்டறிக்கையில் இதனை அறிவித்தனர்.
கனடாவிற்கு வரும் பார ஊர்தி ஓட்டுனர்கள் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் அல்லது PCR சோதனை, தனிமைப்படுத்தல் தேவைகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற கனடாவின் ஆரம்பக் கொள்கை அமுலில் இருக்கும் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.