தேசியம்
செய்திகள்

தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் Quebecகின் முடிவுக்கு எதிர்ப்பு: Erin O’Toole

தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க Quebec மாகாண அரசாங்கம் எடுத்துள்ள முடிவை எதிர்ப்பதாக Erin O’Toole கூறினார்.

மாகாண அதிகார வரம்பை மதிக்கின்ற போதிலும் இந்த திட்டத்தை எதிர்ப்பதாக Conservative தலைவர் O’Toole வியாழக்கிழமை (13) தெரிவித்தார்.

மருத்துவம் அல்லாத காரணங்களுக்காக COVID தடுப்பூசி போட மறுக்கும் குடியிருப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என முதல்வர் François Legault செய்வாய்கிழமை அறிவித்திருந்தார்.

Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த முன்மொழிவு பாரபட்சமானது, நெறிமுறையற்றது, குறைந்த வருமானம் பெறுபவர்களை தண்டிப்பது என கண்டித்துள்ளனர்.

Quebec அரசாங்கத்தின் இந்த யோசனையை ஆதரிப்பதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் முன், திட்டத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என புதன்கிழமை பிரதமர் Justin Trudeau கூறியிருந்தார்.

Related posts

உக்ரைனில் நிகழ்வது இனப்படுகொலை என அழைப்பது முற்றிலும் சரி: பிரதமர் Trudeau

$4.6 பில்லியன் COVID நிதி உதவியை தகுதியற்றவர்கள் பெற்றுள்ளனர்

Lankathas Pathmanathan

Montrealலில் Moderna தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை

Lankathas Pathmanathan

Leave a Comment