Pfizerரின் COVID வைரஸ் எதிர்ப்பு மருந்து மதிப்பாய்வின் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக Health கனடா கூறுகின்றது.
Health கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர் Dr. Supriya Sharma வியாழக்கிழமை (13) இந்த தகவலை வெளியிட்டார்.
Pfizerரின் நம்பிக்கைக்குரிய வைரஸ் தடுப்பு மருந்தை மறு ஆய்வு செய்வதற்கான இறுதிக் கட்டங்களில் Health கனடா செயல்பட்டு வருகிறது என அவர் கூறினார்.
அடுத்த வாரம் முதல் 10 நாட்களுக்குள் இது குறித்து முடிவு வெளியாகும் என Sharma கூறினார்.
December 1, 2021 அன்று Pfizer தனது மருந்தான Paxlovidக்கான மருத்துவ தரவை Health கனடாவிடம் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.