வெளிநாடுகளில் எங்கும் இல்லாத அளவுக்கு கடந்த ஆறு ஆண்டுகளில் மெக்சிகோவில் அதிகமான கனேடியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
கனடிய வெளிவிவகார அமைச்சின் ஆவணங்களின்படி இந்த தரவு வெளியானது.
2016 முதல் வெளிநாடுகளில் அதிக எண்ணிக்கையிலான கனடியர்கள் கொல்லப்பட்ட நாடுகளின் பட்டியலில் மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது.
2016 ஆம் ஆண்டு முதல் மெக்சிகோவில் இருபத்தைந்து கனடியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
2018 ஆம் ஆண்டு அதிக இறப்புகள் அங்கு பதிவாகியுள்ளது.
கனேடியர்கள் படுகொலை செய்யப்பட்ட இரண்டாவது மிக உயர்ந்த தரவரிசை நாடாக அமெரிக்கா உள்ளது.
மொத்தத்தில், 2016 முதல் November 29, 2021 வரை 66 நாடுகளில் 207 கனேடியர்கள் வெளிநாடுகளில் கொல்லப்பட்டதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன