தேசியம்
செய்திகள்

Ontarioவில் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும்!

Ontarioவில் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கின்றன.

January 17 ஆம் திகதி முதல் Ontarioவில் மாணவர்கள் நேரில் கற்றலுக்குத் திரும்புகின்றனர்

Doug Ford அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் திங்களன்று இதனை உறுதிப்படுத்தினார்.

குளிர்கால விடுமுறையின் பின்னர் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் முதலில் January 3ஆம் திகதி ஆரம்பிக்க இருந்தன.

ஆனால் Ford அரசாங்கம் ஆரம்பத்தில் வகுப்பறைகளுக்கு திரும்புவதை January 5 வரை தாமதப்படுத்தியது.

இந்த இரண்டு கூடுதல் நாட்கள் பாடசாலைகள் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தயார்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கும் என கூறப்பட்டது.

கடந்த வாரம், குறைந்தபட்சம் January 17 வரை மாணவர்கள் இணையவழி கல்வியை தொடரவேண்டும் என அரசாங்கம் அறிவித்தது.

British Columbia, Alberta மாகாணங்களில் திங்கட்கிழமை முதல் மாணவர்கள் மீண்டும் வகுப்பறை கல்வியை ஆரம்பித்துள்ளனர்

புதிய கட்டுப்பாடுகளுடன் மாணவர்கள் விடுமுறையில் இருந்து திங்கட்கிழமை வகுப்பறைக்குத் திரும்பினர்.

COVID தொற்றின் அதிகரிப்புக்கு மத்தியில் மாணவர்கள் எப்போது, எந்த நிலைமைகளின் கீழ் வகுப்பிற்குத் திரும்ப வேண்டும் என்ற விடயம் நாடு முழுவதும் விவாதப் பொருளாக உள்ளது.

Related posts

Rexdale துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலி – நால்வர் காயம்

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Floridaவில் தொடர் மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு கனேடியர்கள் பலி!

Gaya Raja

Leave a Comment