Manitoba மாகாணம் பொது சுகாதார உத்தரவுகளை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கிறது.
Manitobaவின் பொது சுகாதார உத்தரவுகள் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் Audrey Gordon கூறுகிறார்.
கடந்த மாதம் முதலில் அறிவிக்கப்பட்டு எதிர்வரும் செவ்வாய் கிழமையுடன் காலாவதியாக விருந்த விதிகள், இப்போது குறைந்தபட்சம் February 1ஆம் திகதி வரை நீடிக்கும் என Gordon வெள்ளிக்கிழமை (07) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த நீட்டிப்பு தரவுகளை சேகரிக்கவும், Omicron மாறுபாட்டின் தாக்கங்களை கண்காணிக்கவும் மாகாணத்திற்கு கால அவகாசம் வழங்கும் என அவர் கூறினார்