February 23, 2025
தேசியம்
செய்திகள்

Omicron பதில் நடவடிக்கை குறித்து விவாதிக்க அவசர நாடாளுமன்ற குழு கூட்டம் அவசியம்: Erin O’Toole வலியுறுத்தல்

கனடிய அரசாங்கத்தின் Omicron திரிபின் பதில் நடவடிக்கை குறித்து விவாதிக்க அவசர நாடாளுமன்ற குழு கூட்டத்தை Conservative கட்சி கோரியுள்ளது.

Conservative தலைவர் Erin O’Toole வியாழக்கிழமை (06) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த கோரிக்கையை விடுத்தார்.
Omicron மாறுபாட்டின் பின்னணியில் COVID தொற்றின் தொடர்ச்சியான பரவலை நிர்வகிப்பதற்கான மத்திய அரசின் திறன் குறித்து ஆராய இந்த அவசரக் குழு கூட்டத்தை O’Toole வலியுறுத்துகின்றார்.
தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் தொற்றுகள் பதிவாகும் போதிலும், புதிய தொடர் கட்டுப்பாடுகளின் கீழ் 2022ஆம் ஆண்டை ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் கூறினார்.
அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக மில்லியன் கணக்கான கனடியர்கள் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர் என செய்தியாளர்கள் சந்திப்பில் O’Toole கூறினார்.
கனடாவில் அதிக தடுப்பூசி விகிதம் பதிவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற அமர்வுகள் January மாதம் 31ஆம் திகதி வரை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

Ontario பெரும்பாலான பொது இடங்களில் முகமூடி கட்டுப்பாடுகளை விலத்தியது

Lankathas Pathmanathan

இடர்கால உதவித் திட்டங்களை நீட்டிக்கும் அரசாங்கம்!

Gaya Raja

கனடிய வேலையற்றோர் விகிதத்தில் மாற்றம் இல்லை

Lankathas Pathmanathan

Leave a Comment