அதிக அளவில் பரவக்கூடிய Omicron மாறுபாடு தொடர்பான COVID தொற்று எண்ணிக்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் பொதுத் துறைகள் பணியாளர்கள் பற்றாக்குறையும் எதிர் கொள்ளப்படுகிறது.
சுமார் 20,000 சுகாதாரப் பணியாளர்கள் COVID தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பணிக்கு செல்லவில்லை என வியாழக்கிழமை (06) Quebec காதார அமைச்சர் Christian Dube கூறினார்.
சுமார் 2,500 தொற்றாளர்களை பராமரிப்பதற்கு ஊழியர்களைக் கண்டறிய அரசாங்கம் தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
மேலும் Quebecகில், அதிகமான தொழிலாளர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நான்கு மத்திய சிறைகள் ஊழியர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.
Atlantic பிராந்தியத்தில், சுகாதார ஊழியர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தொற்றுகள் காரணமாக New Brunswick மருத்துவமனைகள் பெரு சவால்களை எதிர்கொள்கின்றன.
Ontarioவில், நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் ஏற்பட்ட தொற்றின் பரவல் காரணமாக சில பகுதிகளில் 20 முதல் 30 சதவீதம் வரை ஊழியர்கள் இல்லாத நிலைக்கு இட்டுச் சென்றது.
Mississauga நகரம் பணியாளர் பற்றாக்குறையால் சில சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
British Colombiaவின் Prince Rupert நகரில் தீயணைப்பு படையினர் பற்றாக்குறை எதிர் கொள்ளப்படுகின்றது.
Winnipeg பொது போக்குவரத்து சாரதிகள் பற்றாக்குறை காரணமாக சேவை குறைப்புகளை அறிவித்துள்ளது.
காவல்துறை அதிகாரிகளுக்கு மத்தியில் அதிகரித்து வரும் COVID தொற்றின் எண்ணிக்கை காரணமாக Winnipeg காவல்துறை அவசரகால நிலையை புதன்கிழமை (06) பிரகடனப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.