COVID காரணமாக கனடாவில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய காலத்தில் எந்த மாற்றமும் இல்லை என புதன்கிழமை (29) அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை பத்திலிருந்து ஐந்து நாட்களாக குறைக்கும் உடனடி திட்டங்கள் கனடாவிடம் இல்லை என கூறப்படுகின்றது.
கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இன்று ஒரு அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
கனடாவில் மாகாணங்கள், பிரதேசங்கள் என உள்ளூர் பொது சுகாதார நிபுணர்களின் உத்தரவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் விதிகள் மாறுபடுகின்றன.
கனடிய மத்திய அதிகாரிகள் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை பரிந்துரைக்கின்றனர்.