கடுமையான குளிர் எச்சரிக்கைகள் British Colombiaவின் பெரும்பாலான பகுதிகளின் தொடர்கின்றன.
செவ்வாய்க்கிழமை (28) British Colombiaவின் பெரும்பாலான பகுதிகளுக்கு கடுமையான குளிர் எச்சரிக்கைகள் மீண்டும் வெளியிடப்பட்டன.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 22 பிராந்தியங்கள் கடுமையான குளிர் எச்சரிக்கையின் கீழ் இருந்தன.
மாகாணத்தின் 21 இடங்களில் செவ்வாய்க்கிழமை அதி குறைந்த குளிர் நிலைகள் பதிவாகியுள்ளன.
இந்த வாரம் மாகாணத்தின் சில பகுதிகளில் குளிர் நிலை – 50 பாகை celsius வரை உணரப்படும் என சுற்றுச்சூழல் கனடா குறிப்பிட்டது.