கனடாவில் செவ்வாய்க்கிழமை (28) மாத்திரம் 27 ஆயிரத்து 23 COVID தொற்றுகள் பதிவாகின.
Quebec, Ontario ஆகிய மாகாணங்களில் தொடர்ந்து அதிக தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர்.
Quebec சுகாதார அதிகாரிகள் 12,833 தொற்றுகளையும் 15 புதிய மரணங்களையும் முறையிட்டனர்.
Ontarioவில் 8,825 தொற்றுகள் பதிவாகின.
British Columbiaவில் 1,785 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.
Albertaவில் 1,400 தொற்றுகள் பதிவாகின.
Albertaவின் இந்த மதிப்பீடுகள் பூர்வாங்க தரவுகளாகும் எனவும் அவை வழக்கமான அறிக்கையிடல் புதன்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டவுடன் சரி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
Manitobaவில் 825 தொற்றுகள் 5 மரணங்கள், Nova Scotiaவில் 561 தொற்றுகள், New Brunswickகில் 306 தொற்றுகள், Newfoundland and Labradorரில் 194 தொற்றுகள், Saskatchewanனில் 162 தொற்றுகள் இரண்டு மரணங்கள், Prince Edward தீவில் 118 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டன
ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் 100க்கும் குறைந்த தொற்றுக்கள் பதிவாகின
செவ்வாய்க்கிழமையுடன் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியன் 70 ஆயிரத்து 457 என கனடாவின் சுகாதார சேவைகள் இணையதளம் கூறுகிறது.
நாடளாவிய ரீதியில் செவ்வாய்க்கிழமை வரை 30 ஆயிரத்து 206 மரணங்களை சுகாதார சேவைகள் பிரிவுகள் பதிவு செய்தன