COVID தொற்றின் ஆரம்பத்தில் இருந்து 2 மில்லியன் தொற்றுக்களை திங்கட்கிழமை (27) கனடா தாண்டியுள்ளது.
விடுமுறைகள் காரணமாக சில மாகாணங்களும் பிரதேசங்களும் தொற்றுக்களின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில் வார இறுதியில் சில தாமதங்கள் உருவாகின.
ஆனாலும் திங்கட்கிழமை தொற்றுகளின் எண்ணிக்கையை 2 மில்லியனை தாண்டியுள்ளது.
மிகவும் பரவக்கூடிய Omicron திரிபின் வருகை நாடளாவிய ரீதியில் தொற்றுகளின் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது.
Boxing தினத்துடன் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 2,000,976 என கனடாவின் சுகாதார சேவைகள் இணையதளம் கூறுகிறது.