Scarboroughவைச் சேர்ந்த தமிழ் இளைஞரின் மரணம் குறித்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 19 வயதான தமிழ் இளைஞருக்கும் எதிரான குற்றச்சாட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
19 வயதான மகிஷன் குகதாசன் என்பவரின் மரணம் குறித்த குற்றச்சாட்டில் அனோஜ் தர்சன் என்பவர் வியாழக்கிழமை (23) மாலை கைது செய்யப்பட்டார்.
அவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர் மீதான குற்றச்சாட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
அனோஜ் தர்சன் மீதான குற்றச்சாட்டு முதலாம் நிலை கொலைக் குற்றச் சாட்டாக தரம் உயர்த்தப்பட்டதுடன் அவருக்கான பிணையும் மறுக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் கொல்லப்பட்டவரை தெரிந்தவர் எனவும், ஒரு வீட்டில் விருந்தில் இருந்து வெளியேறிய பின்னர் அவரை பலமுறை கத்தியால் குத்தியதாகவும் முன்னர் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
மகிஷன் குகதாசனின் உடல் பிரேத பரிசோதனை வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதிலும் அந்த அறிக்கை வெளியாகவில்லை.
இந்த நிலையில் அனோஜ் தர்சன் மீதான அடுத்த நீதிமன்ற விசாரணை January 6ஆம் திகதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.