February 22, 2025
தேசியம்
செய்திகள்

தமிழ் இளைஞரின் மரணம் தொடர்பாக மற்றுமொரு தமிழ் இளைஞர் கைது

Scarboroughவைச் சேர்ந்த தமிழ் இளைஞரின் மரணம் குறித்த குற்றச்சாட்டில் மற்றுமொரு தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை (23) மாலை, Durham பிராந்திய காவல்துறையினர் Torontoவைச் சேர்ந்த 19 வயதான அனோஜ் தர்சன் என்பவரை கைது செய்தனர்.

அவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் கொல்லப்பட்டவரை தெரிந்தவர் எனவும், ஒரு வீட்டில் விருந்தில் இருந்து வெளியேறிய பின்னர் அவரை பலமுறை கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.

கொல்லப்பட்டவர் 19 வயதான மகிஷன் குகதாசன் என அடையாளம் காணப்பட்டார்.

இவர் குறிப்பிடத்தக்க காயங்களுடன் Durham பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது .

Torontoவில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர் அங்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்த தகவல் வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் காவல்துறையினருக்கு முதலில் தெரிவிக்கப்பட்டது.

இவரது இறப்புக்கான காரணம் வெளியிடப்படவில்லை.

Related posts

கனடாவில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களை மீளப்பெறும் Tesla

Lankathas Pathmanathan

Newfoundland மாகாணத்திற்கு இராணுவ உதவி: பிரதமர்

Lankathas Pathmanathan

British Colombiaவில் காட்டுத்தீ எச்சரிக்கை காரணமாக 4,300 வீடுகள் வெளியேற்ற உத்தரவு!

Gaya Raja

Leave a Comment