தேசியம்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் பதிவு!

கனடாவில் வியாழக்கிழமை (23) மீண்டும் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் COVID தொற்றுக்கள் பதிவாகின.

வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

இவற்றில் பெரும்பாலானவை Ontarioவிலும் Quebecகிலும் பதிவாகின.

Quebecகில் 9,397 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

இது புதன்கிழமை பதிவான 6,361 என்ற எண்ணிக்கையை விட 50 சதவீத அதிகரிப்பாகும்.

Ontario வியாழக்கிழமை 5,790 புதிய தொற்றுக்களை பதிவு செய்தது.

இது Ontarioவில் பதிவான ஒரு நாளுக்கான அதிகூடிய தொற்றுகளாகும்.

British Colombiaவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒரு நாளுக்கான அதிக தொற்றுக்கள் வியாழக்கிழமை பதிவாகின.

British Columbiaவில் 2,046 புதிய தொற்றுகள் அறிவிக்கப்பட்டன.

Nova Scotia, New Brunswick, Prince Edward தீவும் அதிகபட்ச ஒற்றை நாள் தொற்றின் அதிகரிப்பை வியாழக்கிழமை பதிவு செய்தன.

Nova Scotiaவில் 689, New Brunswickகில் 257 என வியாழக்கிழமை புதிய தொற்றுக்களை அதிகாரிகள் அறிவித்தனர்.

வியாழக்கிழமை தொடர்ந்து எட்டாவது நாளாக அதிகபட்ச ஒற்றை நாள் தொற்றை Nova Scotia பதிவு செய்தது.

Prince Edward தீவும் வியாழக்கிழமை 35 புதிய தொற்றுகளுடன் ஒரு நாளுக்கான அதிக தொற்றுக்களை அறிவித்தது

அண்மைய மாதங்களில் அதிகமான மக்கள் வீட்டிற்குள் நேரத்தைச் செலவிடுவதுடன் விடுமுறை நாட்களில் கூடிவருவதால் தொற்றுகள் வேகமாக அதிகரித்துள்ளன.

நாடளாவிய ரீதியில் புதன்கிழமை 14,987,செவ்வாய்க்கிழமை 11,692, திங்கட்கிழமை 10,665 என தொற்றுகள் பதிவாகின.

Related posts

Albertaவில் மீண்டும் ஆட்சியமைக்கும் United Conservative கட்சி

Lankathas Pathmanathan

Canada Post ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடரும்: தொழிலாளர் அமைச்சர்

Lankathas Pathmanathan

இரண்டாவது இடைத் தேர்தல் தோல்வியை எதிர்கொண்ட பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment