பயணம் இன்றியமையாததாக இருக்கும் வரை நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்ற அறிவுரையை மீறியதற்காக Liberal நாடாளுமன்ற உறுப்பினர் அவரது கட்சியின் தலைமைக் கொறடாவால் விமர்சிக்கப்பட்டார்.
Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Yves Robillard, கட்சியின் அறிவுறுத்தல்களை மீறி கனடாவிற்கு வெளியே பயணம் செய்ததற்காக ஆழ்ந்த ஏமாற்றம் அடைவதாக கட்சியின் தலைமைக் கொறடா Steven MacKinnon புதன்கிழமை (22) வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.
Omicron திரிபின் அதிகரிப்பால், அத்தியாவசியமற்ற சர்வதேச பயணங்களைத் தவிர்க்குமாறு Liberal நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Robillard முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், நாடாளுமன்ற விடுமுறையின் போது அவரது பயணம் அவசியமானதாக கருதப்படவில்லை எனவும் அதன் விளைவாக தேசிய பாதுகாப்புக்கான நிலைக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கப்படுவார் எனவும் MacKinnon கூறினார்.