புதிய COVID கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தொழிலாளர்களுக்கும், வணிகங்களுக்கும் உதவித் தகுதிகளை விரிவுபடுத்த கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
Omicron தொற்றின் பரவல் காரணமாக தொடரும் புதிய பொது சுகாதாரக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருந்தும் வகையில், பல ஆதரவுத் திட்டங்களின் தகுதியை தற்காலிகமாக விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland , வேலைவாய்ப்பு, பணியாளர் மேம்பாடு மற்றும் ஊனமுற்றோர் அமைச்சர் Carla Qualtrough ஆகியோர் இணைந்து புதன்கிழமை (22) இந்த அறிவித்தலை வெளியிட்டனர்.
இந்த திட்டங்கள் December 19 முதல் February 12, 2022 வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
பரவி வரும் Omicron திரிபால் அதிகரித்து வரும் தொற்றுகளின் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாகாணங்களும் பிராந்தியங்களும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது/