Ontario முதல்வர் Doug Fordடின் வீட்டிற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (20) நிகழ்ந்தது.
வார இறுதியில் இருந்து தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் Etobicokeவில் உள்ள முதல்வர் Ford குடும்பத்துடன் வசிக்கும் தெருவுக்கு அருகில் கூடிய போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
Toronto காவல்துறையினர் Ford குடும்பத்துடன் வசிக்கும் வீதியின் நுழைவாயிலை தடுத்து பாதுகாப்பு வளையம் ஒன்றை அமைத்துள்ளனர்.
நேற்று ஒரு பெண் அந்த வளையத்தை மீற முயன்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் கூறினார்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக Ford அவரது இல்லத்திற்கு நுழையவோ அல்லது தங்கவோ முடியாத நிலை தோன்றியுள்ளதாக முதல்வரின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.