கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Jolyக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
விரைவான சோதனையின் மூலம் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் திங்கட்கிழமை (20) Twitter மூலம் அறிவித்தார்.
தான் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறிய Joly, PCR பரிசோதனையின் முடிவுகள் வரும் வரையில் தொடர்ந்து தனக்கான கடமைகளை ஆற்றவுள்ளதாகவும் கூறினார்.
தடுப்பூசிகள் வழங்கும் பாதுகாப்புக்கு தான் நன்றியுள்ளதாக இருப்பதாக கூறிய அமைச்சர், இதுவரை தடுப்பூசி பெறாத கனேடியர்களை தங்கள் தடுப்பூசிகளைப் பெற ஊக்குவிக்கிறார்.
கடந்த October மாதம் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட Joly, தொற்றால் பாதிக்கப்பட்ட முக்கியமான கனேடிய அரசியல்வாதிகளில் ஒருவராவார்.