COVID பாதிப்புகள் அதிகரித்து வருவதால் திங்கட்கிழமை இரவு முதல் பாடசாலைகள், சூதாட்ட விடுதிகள், திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்களை Quebec அரசாங்கம் மூடுகிறது
இன்றைய நிலைமை ஆபத்தானது என Québec சுகாதார அமைச்சர் Christian Dubé கூறினார்.
பாடசாலைகள் குறைந்தபட்சம் January 10 வரை மூடப்படும் என கூறிய அவர், இணைய வழி கற்றல் January இறுதி வரை நீட்டிக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்
உணவகங்கள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை, 50 சதவீத கொள் திறனுடன் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது
விளையாட்டு நிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் இல்லாமல் தொடர்ந்து நடைபெறும்.
அதேவேளை வீட்டிலிருந்து வேலை செய்யும் அறிவுரை அடுத்த அறிவிப்பு வரும் வரை அமுலில் இருக்கும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.