Quebec சுகாதார அதிகாரிகள் ஒரு நாளுக்கான அதிக COVID தொற்றுக்களை திங்கட்கிழமை பதிவு செய்தனர்.
திங்கட்கிழமை 4,571 தொற்றுக்கள் அங்கு பதிவாகின.
தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21ஆல் அதிகரித்துள்ளது.
தற்போது 397 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர்.
கடந்த நான்கு வார COVID தரவுகளின் அடிப்படையில், தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு 1.9 மடங்கு அதிகமாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற 13.8 மடங்கு அதிகமாகவும் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் மூன்று பேர் திங்கட்கிழமை Quebecகில் தொற்றால் இறந்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.