Ontario சுகாதார அதிகாரிகள் திங்கட்கிழமை 3,783 புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி இப்போது சுமார் 2,863 ஆக உள்ளது.
இது முந்தைய வாரத்தில் 1,328 ஆக இருந்தது.
திங்கட்கிழமை புதிய இறப்புகள் எதுவும் Ontarioவில் பதிவு செய்யப்படவில்லை.
தொற்றின் காரணமாக தற்போது குறைந்தது 284 பேர் மருத்துவமனையில் உள்ளனர்
அவர்களில் 164 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது