Prince Edward தீவு விவசாயிகளுக்கு உதவ கனடிய அரசாங்கம் 28 மில்லியன் டொலர்களை செலவழிக்கிறது.
உருளைக்கிழங்கு மீதான அமெரிக்காவின் ஏற்றுமதி தடையை சமாளிக்க இந்த உதவி வழங்கப்படுகிறது.
விவசாய அமைச்சர் Marie-Claude Bibeau திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
கனடாவில் அதிக உருளைக்கிழங்கு பதப்படுத்தும் திறனை உருவாக்குதல் உட்பட விவசாயிகளுக்கு உதவ இந்த நிதி பயன்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
ஏற்றுமதிக்கு நிர்ணயிக்கப்பட்ட உருளைக்கிழங்கு அனைத்தும் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்வதில் அறிவிக்கப்பட்ட பணம் முக்கியமானதாக இருக்கும் என P.E.I. முதல்வர் Dennis King கூறினார்.