Ontarioவின் தினசரி COVID தொற்றின் எண்ணிக்கை April மாதத்திற்குப் பின்னர் முதல் முறையாக 4,000க்கு மேல் பதிவானது.
Ontario சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) 4,177 புதிய தொற்றுகளை பதிவு செய்துள்ளனர்.
Ontarioவில் 4,505 புதிய தொற்றுகள் பதிவாகிய April 23க்குப் பின்னர் இதுவே அதிக எண்ணிக்கையிலான தினசரி தொற்றுகள் ஆகும்.
மேலும் இரண்டு மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்தனர்.
Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி இப்போது சுமார் 2,542 ஆக உள்ளது.
இது முந்தைய வாரத்தில் 1,235 ஆக இருந்தது.
Ontarioவில் 11,359,730 பேர் முழுமையான தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்