February 23, 2025
தேசியம்
செய்திகள்

கனடா அனைத்து பயணிகளுக்கும் COVID சோதனை தேவையை அறிவித்தது

கனடாவுக்குள் வரும் பயணிகள் அனைவரும் எதிர்மறையான மூலக்கூறு COVID சோதனைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும் என கனடா மீண்டும் கோருகிறது.

புதுப்பிக்கப்பட்ட இந்த முன் வருகை சோதனை நடைமுறை December 21 முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசாங்கம் வெள்ளிக்கிழமை (17) அறிவித்தது.

இதனை ஒரு கூடுதலான பாதுகாப்பு நடவடிக்கை என சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos வர்ணித்தார்.

இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடுகளுக்குக்கான பயணத் தடையை நீக்கவும் கனடா முடிவு செய்துள்ளது.

இந்தத் தடை சனிகிழமை (18) இரவு 11:59 மணிக்கு நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

COVID தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், அத்தியாவசியமற்ற சர்வதேச பயணத்திற்கு எதிராக மத்திய அரசாங்கம் நேற்று முன்தினம் அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது.

இந்த பயண கட்டுப்பாடுகள் நான்கு வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Liberal நாடாளுமன்ற குழுவின் சந்திப்பு!

Lankathas Pathmanathan

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக $10.5 மில்லியன் பெறும் கனடிய அணி

Lankathas Pathmanathan

February மாதத்தில் பணவீக்கம் குறைந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment