தென்னாப்பிரிக்காவில் சிக்கியிருக்கும் பயணிகளுக்கு கனடாவின் பயண விலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
தென்னாப்பிரிக்காவில் இருந்து சில பயணிகள் கனடா திரும்ப அனுமதிக்க அதன் பயணத் தடையின் சில பகுதிகளை தற்காலிகமாக நீக்கிய பின்னர், கனேடிய அரசாங்கம் அதன் விலக்கை நீட்டிக்கிறது.
சனிக்கிழமை வெளியான புதிய அறிவித்தலின் பிரகாரம், தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணித்து வேறு விமான நிலையங்கள் ஊடாக கனடா திரும்பும் பயணிகள் குறைந்தபட்சம் January 7ஆம் திகதி வரை மூன்றாம் நாட்டிலிருந்து எதிர்மறையான PCR பரிசோதனையை வழங்க வேண்டியதில்லை என கூறப்படுகின்றது.
கூடுதலாக, இந்த விலக்கு இப்போது தென்னாப்பிரிக்காவிலிருந்து கனடாவிற்கு வருகைதரும் அனைத்து விமானங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.