கனடாவில் COVID தொற்றின் பாதிப்புகளுக்கு சமூக வெளிப்பாடு தொடர்ந்து முக்கிய காரணமாக உள்ளதாக சமீபத்திய தரவுகளில் சுட்டிக்காட்டப்படுகிறது.
கனடா முழுவதும் உள்ள பெரும்பாலான தொற்றுக்கு சமூகப் பரவல் தொடர்ந்து காரணமாக உள்ளது என வெள்ளிக்கிழமை (10) வெளியான கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் முதற்கட்டத் தரவுகள் தெரிவிக்கின்றன.
தொற்றின் ஆரம்பத்திலிருந்து குறைந்தது 68 சதவீத COVID தொற்றுகள் சமூக அமைப்புகளிலிருந்து வெளியானவை என கூறப்படுகிறது.
கனடாவின் பொது சுகாதார நிறுவனத்திடமிருந்து கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் சேகரித்த தரவுகளின்படி இந்த விபரம் வெளியானது.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நான்கு COVID தொற்றளர்களில் ஒருவர் இறந்துவிட்டார் எனவும் தரவுகள் வெளியாகியுள்ளன.
தொற்று குறித்த அறிக்கையிடல் முறைகள் மாகாணத்திற்கு மாகாணம் வேறுபடுவதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டவர்கள், இறப்புகளின் எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.