கனடாவுக்கான புதிய modelling தரவுகள் COVID தொற்றின் அதிகரிப்புக்கான சாத்தியத்தை எடுத்துக் காட்டுகிறது.
புதிய modelling தரவுகள் வரவிருக்கும் வாரங்களில் தொற்றின் மறுமலர்ச்சியை சுட்டிக்காட்டுகிறது.
இது புதிய Omicron திரிபினால் மேலும் துரிதப்படுத்தப்படலாம் என எச்சரிக்கப்படுகிறது
Delta திரிபு கனடாவிலும் உலகெங்கிலும் தொற்றின் அதிகரிப்புக்கான காரணியாக உள்ளது என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam கூறினார்.
Omicron திரிபின் பரவல் உலகளவில் அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டிய அவர் கனடாவில் அதன் சமூக பரவலுக்கான ஆரம்ப அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்தார்.
கனடாவில் இதுவரை 87 உறுதிப்படுத்தப்பட்ட Omicron திரிபுகள் பதிவாகியுள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை சர்வதேச பயணம் மூலமும் நெருங்கிய தொடர்புகள் மூலமும் கண்டறியப்படுகிறது.
ஆனாலும் பயணத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத தொற்றுக்கள் பதிவாக ஆரம்பித்துள்ளதாகவும் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தியர் Tam குறிப்பிட்டார்.