தேசியம்
செய்திகள்

தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தில் January 4 முதல் Ontarioவில் மாற்றம்

தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தில் மாற்றங்களை வெள்ளிக்கிழமை (10) Ontario அரசாங்கம் அறிவித்தது.

Omicron திரிபின் திடீர் அதிகரிப்புக்கு பின்னர் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.

January மாதம் 4ஆம் திகதி முதல், Ontarioவில் தடுப்பூசிக்கான ஆதாரம் தேவைப்படும் இடங்களில் QR குறியீடு மற்றும் Verify Ontario செயலியை மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என அரசாங்கம் அறிவித்தது.

இந்த புதிய மாற்றம் காலவரையின்றி அமுலில் இருக்கும் என வெள்ளியன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Ontarioவின் தலைமை சுகாதார அதிகாரி வைத்தியர் Kieran Moore அறிவித்தார்.

December 20 முதல், 12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுகளில் பங்கேற்கும் போது தடுப்பூசி போட்டதற்கான ஆதாரம் தேவை எனவும் அறிவிக்கப்பட்டது.

Ontario வாசிகள் தங்கள் சமூக ஒன்றுகூடல்களையும் விடுமுறைக் காலத்தில் அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த கடுமையாக அறிவுறுத்தப்படுகின்றனர் .

Related posts

புதிய ஆண்டில் COVID தொற்றின் அதிகரிப்பை எதிர் கொள்ளலாம்!

Lankathas Pathmanathan

ஆறு இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் கட்டுமான நிறுவனம் மீது குற்றச் சாட்டு

Lankathas Pathmanathan

சமாதானத்தை நோக்கிய பாதையில் கனடா உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்!

Lankathas Pathmanathan

Leave a Comment