தேசியம்
செய்திகள்

கனடாவில் COVID காரணமாக 29,900 மரணங்கள் பதிவு

வெள்ளிக்கிழமை (10) மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் கனடாவில் பதிவாகின.

மொத்தம் 4,745 தொற்றுக்கள் வெள்ளிக்கிழமை கனடாவில் பதிவாகின.

மீண்டும் Quebec மாகாணம் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களை பதிவு செய்தது.

Quebec சுகாதார அதிகாரிகள் 2,013 தொற்றுகளையும் ஆறு மரணங்களையும் அறிவித்தனர்.

கடந்த January மாதத்தின் பின்னர் முதல் தடவையாக இரண்டாயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்களை Quebec பதிவிட்டது.

Ontario மாகாணத்திலும் தொடர்ந்தும் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

1,453 தொற்றுகளையும் 11 மரணங்களையும் Ontario சுகாதார அதிகாரிகள் வெள்ளியன்று அறிவித்தனர்.

British Columbiaவில் 437 தொற்றுகளும் மூன்று மரணங்களும் அறிவிக்கப்பட்டது.

Albertaவில் 287 தொற்றுகளும் ஒரு மரணமும் அறிவிக்கப்பட்டது.

Manitobaவில்198 தொற்றுகளும் ஒரு மரணமும் அறிவிக்கப்பட்டது.

Nova Scotiaவில் 123 தொற்றுகள் பதிவாகின.

ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் தலா 100க்கும் குறைவான தொற்றுகளை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

வெள்ளிக்கிழமை வரை கனடாவில் 1,827,755 தொற்றுகளும் 29,900 மரணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

கனடியர்கள் ஒரு தேர்தலை விரும்புகின்றனர்? – பிரதமரின் கருத்து!

Lankathas Pathmanathan

2024 இன் அதிக வெப்பமான நாள்?

Lankathas Pathmanathan

Doug Fordக்கு  எதிராக போராட்டம் நடத்திய  பெண் காவல்துறையினரால் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment