Ontarioவில் COVID நிலைமை மோசமடைந்து வருவதால், பல பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதல்வர் Doug Ford வெள்ளிக்கிழமை (10) தனது அமைச்சரவையை சந்திக்கவுள்ளார்.
இந்த வார ஆரம்பத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மோசமடைந்து வரும் பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்கு பல தெரிவுகள் முன்வைக்கப்பட்டதாக தெரியவருகிறது.
இதில் குளிர்கால இடைவேளைக்கு முன்னரும் பின்னரும் குறிப்பிட்ட காலத்திற்கு பாடசாலைகளை மூடுவதும், மாகாணத்தை மீண்டும் திறக்கும் திட்டத்தின் மூன்றாம் படிக்கு திருப்புவதும் உள்ளடங்குகிறது.
ஆனாலும் பொது சுகாதாரக் கட்டுப்பாடுகளில் எந்த பெரிய மாற்றங்களையும் செய்ய அந்த நேரத்தில் அரசாங்கம் தயாராக இருக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில் மற்றொரு அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிமை காலை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Ontarioவில் வியாழக்கிழமை சுகாதார அதிகாரிகள் 1,290 புதிய தொற்றுக்களை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.