தேசியம்
செய்திகள்

ஹிஜாப் அணிந்த ஆசிரியர் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டது ஒரு கோழைத்தனமான நடவடிக்கை

ஹிஜாப் அணிந்ததற்காக Quebec மாகாணத்தில் ஆசிரியர் ஒருவர் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டது ஒரு கோழைத்தனமான நடவடிக்கை என விமர்சிக்கப்படுகிறது.
மேற்கு Quebecகில் ஒரு ஆரம்ப பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் செய்ததைக் கண்டித்து பல அரசியல்வாதிகள் குரல் எழுப்புகின்றனர்..
ஆசிரியர்கள் மதச் சின்னங்களை அணிவதை தடை செய்யும் மாகாணத்தின் சட்டத்தை இந்த ஆசிரியர் அணிந்த ஹிஜாப் மீறுவதாகக் கூறப்பட்டதை தொடர்ந்து அவர் தனது வேலையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்.
Bill 21 என அழைக்கப்படும் இந்தச் சட்டம், 2019ஆம் ஆண்டு June மாதம் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டம் அதிகாரப் பதவியில் இருப்பதாக கருதப்படும் ஆசிரியர்கள், பிற அரசு ஊழியர்கள் ஹிஜாப்கள் உள்ளிட்ட தலைப்பாகைகள் போன்ற மத அடையாளங்களை அணிவதை தடை செய்கிறது.
இது கோழைத்தனமானது என கூறிய  Montreal பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான Marc Miller இந்த வகையான பாகுபாடு நான் வாழ விரும்பும் Quebec சமூகத்தை பிரதிபலிக்கவில்லை என தெரிவித்தார்.
NDP தலைவர் Jagmeet Singh பாடசாலை  நிர்வாகத்தின் முடிவை கடுமையாக விமர்சித்தார்.
இது  ஒரு முழுமையான அவமானம் என குறிப்பிட்ட Conservative கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர்  Kyle Seeback, Bill 21 நீதிமன்றத்தில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Related posts

உக்ரைனை ஆதரிக்காத நிலை உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Atlantic கனடாவை மீண்டும் தாக்கும் கடுமையான பனிப்புயல்

Lankathas Pathmanathan

2024 Paris Olympic: மூன்றாவது தங்கம் வென்ற கனடியர்

Lankathas Pathmanathan

Leave a Comment